Header Logo

இந்தியா
இந்தியாவில் முதன்முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி

Mar 11, 2026 - 01:19 PM -

0

இந்தியாவில் முதன்முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி

கண்ணியமாக மரணமடைவது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதை அங்கீகரித்து, இந்தியாவில் முதன்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞர், 13 ஆண்டுகளுக்கு முன்பு மாடியிலிருந்து விழுந்ததில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். அன்றிலிருந்து இன்று வரை எவ்வித முன்னேற்றமும் இன்றி, செயற்கை சுவாசத்தின் உதவியுடனேயே அவர் உயிர் வாழ்ந்து வந்தார்.

தனது மகனின் வேதனையான நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி ஹரிஷ் ராணாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஹரிஷ் ராணாவின் செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கியது.

இந்தத் தீர்ப்பின் போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 'கண்ணியமாக மரணமடைவது' என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை எனத் தெரிவித்தனர். மருத்துவ ரீதியாக குணமடைய வாய்ப்பே இல்லாத நிலையில், ஒருவரைத் தொடர்ந்து செயற்கை முறையில் உயிர் வாழ வைப்பது தேவையற்றது என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title