Header Logo

வணிகம்
Mobil Delvac இன் 100 ஆவது வருட பூர்த்தியை McLarens Lubricants கொண்டாடுகிறது

Mar 11, 2026 - 01:20 PM -

0

Mobil Delvac இன் 100 ஆவது வருட பூர்த்தியை McLarens Lubricants கொண்டாடுகிறது

McLarens Group இன் துணை நிறுவனமும், இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அங்கீகாரம் பெற்ற Mobil Lubricants விநியோகத்தருமான McLarens Lubricants Ltd, உலகின் நம்பிக்கையை வென்ற டீசல் என்ஜின் லுப்ரிகன்ட் வர்த்தக நாமங்களில் ஒன்றான Mobil Delvac இன் நூறு வருட பூர்த்தியை பெருமையுடன் கொண்டாடுகிறது. 

ருடொல்ஃப் டீசலின் என்ஜின் முதன் முதலில் 1897 ஆம் ஆண்டு டியுன் செய்யப்பட்ட போது, அதன் நகர்வு எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பதைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. 1925 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட DELVAC என்பதன் பொருள், “Diesel Engine Lubricant by Vacuum Oil” என்பதாகும். அக்காலத்தில், டீசல் உயர்ந்த வளர்ச்சியை பதிவு செய்ய ஆரம்பித்ததுடன், சர்வதேச வணிகத்தின் முதுகெலும்பாக திகழ ஆரம்பித்தது. இன்று, இலங்கையின் மொத்த லுப்ரிகன்ட்ஸ் சந்தையின் சுமார் அரைப்பங்கை டீசல் என்ஜின் ஒயில் கொண்டுள்ளது. பஸ்கள், லொறிகள், கொள்கலன் ஏற்றும் லொறிகள் முதல் நிர்மாண சாதனங்கள், விவசாய சாதனங்கள் வரை நாட்டின் பொருளாதார இயக்கத்தில் முக்கிய கட்டமைப்பாக அமைந்துள்ளது. 

போக்குவரத்தின் ஒவ்வொரு நகர்விலும், சந்தையை சென்றடையும் ஒவ்வொரு அறுவடையும், துறைமுகத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொரு கொள்கலன் லொறியும் டீசல் என்ஜின்களால் வலுவூட்டப்படுகின்றன. அவை பெரும்பாலும் Mobil Delvac இனால் வலுவூட்டப்படுகின்றன. இன்றைய Delvac இன் உள்ளடக்கத்தில், Delvac Modern மற்றும் Delvac Legend ஆகிய தெரிவுகள் உள்நாட்டு சந்தைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பத்து தசாப்த கால பொறியியல்திறன், கள வினைத்திறன் மற்றும் வாடிக்கையாளர் பங்காண்மை ஆகியவற்றின் திரண்ட அறிவை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. 

McLarens Lubricants Ltd இன் இணை முகாமைத்துவ பணிப்பாளரான சமிந்த குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “Mobil Delvac வர்த்தக நாமத்தின் இந்த நூற்றாண்டு விழாவை எட்டுவதையிட்டு McLarens Lubricants நிறுவனத்தில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு வர்த்தக நாமத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல. கடினமான சவால்களுக்கு மத்தியிலும் தமது இயந்திரங்கள் தடையின்றி இயங்குவதை உறுதிப்படுத்த, Mobil Delvac மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொரு இலங்கை வாகனத் தொகுதி செயற்பாட்டாளர்கள், பாரவூர்தி சாரதிகள் மற்றும் பொறியியலாளர்கள் என அனைவரையும் கௌரவிக்கும் ஒரு கொண்டாட்டமாகும். என்றார். 

Mobil Delvac வர்த்தக நாமத்தின் இந்த நூற்றாண்டு நிறைவானது, உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் டீசல் கைத்தொழில் துறை ஒரு முக்கிய மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் அமைந்துள்ளது. புகை வெளியேற்றத் தரநிலைகள் கடுமையாக்கப்பட்டு வருவதுடன், எரிபொருள் வினைத்திறன் மற்றும் பராமரிப்புச் செலவுகள் தொடர்பில் வாகனத் தொகுதி உரிமையாளர்கள் அதிக அழுத்தங்களை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் புதிய இயந்திரக் கட்டமைப்புகள், நவீன தரங்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட லூப்ரிகன்ட்களை எதிர்பார்க்கின்றன. கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக இவ்வாறான சவால்களுக்கு மொபில் டெல்வாக் தீர்வுகளை வழங்கி வருகின்றது. நீடிக்கப்பட்ட எண்ணெய் மாற்ற இடைவெளிகள் (Oil drain intervals), வெளியேற்ற வாயு சுத்திகரிப்பு தொகுதிகளுடனான (Exhaust after-treatment systems) இணக்கத்தன்மை மற்றும் கடும் வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரு நிலைகளிலும் சிறப்பான செயற்பாடு ஆகியவற்றைக் கொண்ட தற்போதைய டெல்வாக் உற்பத்தி வரிசையானது, எமது தொடர்ச்சியான புத்தாக்கத்தையும் நிலைபேண்தகு தன்மை மீதான நிறுவனத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது. 

குறைந்த புகை வெளியேற்ற இயந்திரத் தொழில்நுட்பங்களுக்காக என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Mobil Delvac Modern Full Protection API CK-4 இந்த முயற்சியில் முன்னிலை வகிக்கின்றது. குறைந்தளவான எண்ணெய் மாற்றங்கள் ஊடாக, கழிவு எண்ணெய் வெளியேற்றம் குறைக்கப்படுவதுடன், லூப்ரிகன்ட் பாவனையும் வீழ்ச்சியடைகின்றது. இது இந்தத் தயாரிப்பை நம்பியிருக்கும் ஒவ்வொரு வாகனத் தொகுதியினதும் சுற்றாடல் பாதிப்பைக் குறைக்க உதவுகின்றது. தூய்மையான மற்றும் பொறுப்புமிக்க செயற்பாடுகளை உலகம் இன்று எதிர்பார்த்து நிற்கும் நிலையில், Mobil Delvac செயல்திறன் மற்றும் புவி மீதான பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நூறு ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் ஒரு வர்த்தக நாமம், நிலைபேண்தகு தன்மை என்பது ஒரு தற்காலிகப் போக்கு அல்ல, அது அடுத்த நூறு ஆண்டுகளுக்கான ஒரு கடப்பாடு என்பதை நன்கு உணர்ந்துள்ளது. 

McLarens Lubricants இந்த மைல்கல்லை முன்னிட்டு, இலங்கை முழுவதும் வாடிக்கையாளர் ஈடுபடுத்தல் திட்டங்கள், தொழில்நுட்பக் கருத்தரங்குகள் மற்றும் வணிக ரீதியிலான விசேட செயற்திட்டங்களை இந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கவுள்ளது. இது கடந்து வந்த நூறு ஆண்டுகால பெருமையை மாத்திரமன்றி, வரவிருக்கும் தசாப்தங்களிலும் இந்த வர்த்தக நாமத்தின் முக்கியத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்துவதாக அமையும்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title