Mar 11, 2026 - 04:43 PM -
0
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கிய விஜய் ஏப்ரல் மாதம் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு வரும் அவர் பெண்களின் ஓட்டுகளை பெற திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில் விஜய்க்கும், நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தவெக தலைவரின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம். அந்த உறவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி விவாகரத்தும் கேட்டிருக்கிறார். சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு ஏப்ரல் 20 ஆம் திகதி விசாரணைக்கு வரும்போது சம்பந்தப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று கூறப்படுகிறது.
அது மட்டும் அல்ல விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்ததால் நீலாங்கரை வீட்டில் என்னை தங்கவிடாமல் வழக்கறிஞர் மூலம் மிரட்டுகிறார் விஜய். அதனால் வழக்கின் தீர்ப்பு வரும் வரை அந்த வீட்டில் தங்க அனுமதி அளிக்கச் செய்ய வேண்டும் என்று இன்னொரு மனுவும் தாக்கல் செய்திருக்கிறார் சங்கீதா.
இந்த இரண்டு மனுக்கள் விஜய்யின் ஓட்டு வங்கியை அதிலும் குறிப்பாக பெண்கள் ஓட்டை பாதிக்கச் செய்து கொண்டிருக்கிறது. தவெகவை சேர்ந்த பெண்கள், ரசிகைகள் சிலர் விஜய்யின் இந்த புது உறவில் தவறு இல்லை என்கிறார்கள். அதே சமயம் விஜய் செய்வது சரியில்லை என்று தவெகவில் இருக்கும் ரசிகைகள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய் பற்றி அவரின் ரசிகை ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, கடைசி வரை காப்பாற்றுவேன் என்று தன் மனைவிக்கும், பெத்த பிள்ளைகளுக்கும் கொடுத்த வாக்குறுதியையே விஜய்யால் காப்பாற்ற முடியவில்லை.
அப்புறம் எப்படி இப்போ அவர் அளித்திருக்கும் வாக்குறுதிகளை நம்பி வாக்களிப்பது?. குடும்பம் தான் எல்லாமே. மனைவி, பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தால் தவெக தலைவர் நிச்சயம் முதல்வராகியிருப்பார். நாங்கள் எல்லோரும் அவர் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம். அவர் ஆட்சிக்கு வந்திருந்தால் எங்களுக்கு சந்தோஷமே. ஆனால் இந்த ஒரு விஷயம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. விஜய் இப்படி செய்ததால் வேறு வழியில்லாமல் பிற கட்சிக்கு ஓட்டு கிடைக்கும் என்றார்.
இது மட்டும் அல்ல விவாகரத்து குறித்து தவெக கூட்டத்தில் விஜய் தெரிவித்ததும் அவருக்கு எதிராக திரும்பிவிட்டது. என் விவாகரத்தை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம், அது அவ்ளோ ஒர்த் இல்ல என விஜய் கூறினார். இத்தனை ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த மனைவி, பெத்த பிள்ளைகளே ஒர்த் இல்லை என்றால் மக்கள் எப்படி உங்களுக்கு ஒர்த்தாக தெரிவார்கள் விஜய் என்று சமூக வலைதளங்களில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
விவாகரத்து குறித்து தகவல் வெளியானதில் இருந்து சங்கீதாவை தரக்குறைவாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இது என் பர்சனல், ஆயிரம் தான் இருந்தாலும் அவர் என் மனைவி. அவரை பற்றி இப்படி மோசமாக பேசுவதை ஏற்க முடியாது. ரசிகர்கள் யாரும் சங்கீதாவை விமர்சிக்க வேண்டாம் என்று விஜய் ஏன் தெரிவிக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்.
விவாகரத்து பிரச்சனை, திருமணத்தை தாண்டிய உறவு தேர்தல் நேரத்தில் விஜய்க்கு எதிராக திரும்பியிருக்கிறது. இதற்கிடையே த்ரிஷாவுடன் விஜய் ஒரே காரில் பயணம் செய்து திருமண வீட்டிற்கு வரவே அதுவும் பேசுபொருளாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
