Header Logo

செய்திகள்
தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை

Mar 11, 2026 - 05:07 PM -

0

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை

புதிய பொருளாதார வாய்ப்புகளை உச்ச அளவில் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். 

அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயார் என கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின் 2026 வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

தனித்தனியாக அல்லாமல் கூட்டாகச் செயல்பட்டு, மத்திய கிழக்கு போர்ச் சூழலால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெல்வோம். 

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் உருவாகியுள்ள புதிய பொருளாதார வாய்ப்புகளை இலங்கைக்குள் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். 

அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து வணிக சமூகத்தினரும் முன்வர வேண்டும் 

அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக வலியுறுத்திய ஜனாதிபதி, நவீன உலகத்துடன் முன்னோக்கிச் செல்லத் தவறியதால் ஒரு தேசமாக நாம் இழந்த பொருளாதார வாய்ப்புகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் குறிப்பிட்டார். 

இதற்காக அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும், அதில் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள் போன்ற பொருளாதார வாய்ப்புகள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிட்டல் மயமாக்கலுக்காக இந்த வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 6.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் அடையாள அட்டையை எப்படியாவது வெளியிட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

உள்ளக அதிர்வுகளை நாம் வெற்றிகொண்டாலும், தற்போது மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஒரு வெளிப்புற அதிர்வு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 42% அதிகரித்துள்ளதால் உலகச் சந்தையில் கடும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. 

2022 இல் டொலர் தட்டுப்பாட்டினால் நெருக்கடி ஏற்பட்ட போதும் இம்முறை ஏற்பட்டிருப்பது விநியோகப் பாதைகள் முடங்கியதால் வந்த விநியோக நெருக்கடியாகும். 

இதனைத் தனித்தனியாக அல்லாமல் அனைவரும் கூட்டாக நின்று எதிர்கொண்டு வெல்ல முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளதுடன், விநியோகத்தைத் தடையின்றிப் பேண நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title