Header Logo

செய்திகள்
மஹிந்தானந்தவின் மேன்முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு

Mar 11, 2026 - 05:49 PM -

0

மஹிந்தானந்தவின் மேன்முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (11) நிறைவு செய்தது. 

இதனையடுத்து, இந்த மேன்முறையீடுகளின் மீதான தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை உயர் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. 

இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்த விசாரணையின்போது, பிரதிவாதிகளான மேன்முறையீட்டாளர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளின் வாதங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவடைந்தன. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதியரசர்கள் குழாம், வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை பின்னர் ஒரு திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title