Header Logo

செய்திகள்
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஈரான் பங்கேற்க வாய்ப்பில்லை

Mar 11, 2026 - 10:28 PM -

0

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஈரான் பங்கேற்க வாய்ப்பில்லை

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் ஈரானின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி பங்கேற்கும் நிலையில் இல்லை என்று அந்த நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அஹ்மத் துன்யமாலி தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்று அவர் வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கான பொருத்தமான சூழல் எந்தவொரு நிலையிலும் எம்மிடம் இல்லை. 

எமது வீரர்கள் பாதுகாப்பாக இல்லை. எனவே, போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது நிலவவில்லை. 

கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில், இரண்டு போர்கள் எம்மீது திணிக்கப்பட்டுள்ளன. 

இதில் எமது மக்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு தியாகிகளாக்கப்பட்டுள்ளனர். எனவே, பங்கேற்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை என தெரிவித்துள்ளார். 

அதேவேளை ஈரானிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ், இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.​ 

இம்முறை உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரை அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title