Header Logo

செய்திகள்
ஈரானிய கப்பல் விவகாரத்தில் இராணுவத்தை சாடிய டிரம்ப்

Mar 12, 2026 - 06:54 AM -

0

  ஈரானிய கப்பல் விவகாரத்தில் இராணுவத்தை சாடிய டிரம்ப்

இலங்கை கடற்கரைக்கு அப்பால் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து தான் கேள்வி எழுப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கென்டக்கி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், குறித்த கப்பலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக அதனை ஏன் அழித்தீர்கள் என்று தான் இராணுவ அதிகாரிகளிடம் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"நாம் ஏன் அவர்களைக் கொன்றோம்? அவர்களைக் கைது செய்து நமது கடற்படையில் சேர்த்திருக்க முடியாதா?" என்று தான் அதிகாரிகளிடம் கேட்டதாக அவர் அங்கு தெரிவித்தார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலைக் கைப்பற்றுவதை விட அதனை மூழ்கடிப்பதே சிறந்தது என்று தனது ஜெனரல் ஒருவர் தன்னிடம் கூறியதாகவும், அவர் அதனை "ஐயா, அதுதான் அதிக வினோதமானது" என்று விவரித்ததாகவும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் நடத்தப்பட்ட டார்பிடோ (Torpedo) தாக்குதலில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'Frigate' ரகத்தைச் சேர்ந்த IRIS Dena என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 104 கடற்படையினர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title