Mar 12, 2026 - 06:53 PM -
0
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.
இந்நிலையில் அவரிடம் 7 மணிநேரத்திற்கு அதிக காலம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
