Header Logo

மலையகம்
70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

Mar 13, 2026 - 10:53 AM -

0

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பிரிவில் நேற்று (12) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

திக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இவர்கள் திக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கிச் சென்று தோட்டப் பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

விபத்தில் காயமடைந்த மூவரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் உடனடியாக திக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதிவேகமாகச் சென்றமையால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!