Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
22 பெண்களை திருமணம் முடித்த ஆசாமி

Mar 13, 2026 - 11:19 AM

22 பெண்களை திருமணம் முடித்த ஆசாமி
Mobitel Inner 1278

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச் சென்றார். 

இதுகுறித்த வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் ஆற்றிங்கல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில், திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த பாகுலேயன் (வயது 56) என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து பொலிஸார் அவரை தேடி வந்தனர். அதனை அறிந்த பாகுலேயன் தலைமறைவானார். 

இந்த நிலையில் நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து அவரை மடக்கி பிடித்து பொலிஸார் கைது செய்தனர். பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

அப்போது மனைவியை திருப்திபடுத்த நகை பறிப்பில் ஈடுபட்டது அம்பலமானது. ஒரு மனைவியா? என கேட்க அவர் அளித்த பதில் பொலிஸாரை திகைக்க வைத்தது. மாவட்டம் தோறும் மனைவிகள் இருப்பதாக கூறி தம்பட்டம் அடித்துள்ளார். 

அதாவது பாகுலேயன் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்துள்ளார். இவ்வாறு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றி மணமுடித்துள்ளார். 

ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் தனது பெயரை மாற்றி மாற்றி கூறி லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளார். அதன்படி இவருக்கு தாஸ், பாபு, சுந்தரன், ராஜன், விஜயன், கல்யாணராமன் என பல பெயர்கள் உள்ளன. 

மேலும் தனது மனைவிகளை திருப்திபடுத்தவும். அவர்களுக்கு விதவிதமாக நகைகளை அணிவித்து அழகு பார்க்கவும் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

குறிப்பாக பூட்டப்பட்டு கிடக்கும் வீடுகளை குறி வைத்து கைவரிசை காட்டியுள்ளார். பாகுலேயன் மீது கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன போன்ற தகவல்கள் பொலிஸ் விசாரணை மூலம் அம்பலமானது. 

இதையடுத்து பாகுலேயனை பொலிஸார் ஆற்றிங்கல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பலே ஆசாமி 22 பெண்களை மணந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278