Header Logo

செய்திகள்
உரத்திற்கும் QR குறியீடு அறிமுகமாகும் அச்சம் - சஜித் குற்றச்சாட்டு

Mar 15, 2026 - 09:13 PM -

0

உரத்திற்கும் QR குறியீடு அறிமுகமாகும் அச்சம் - சஜித் குற்றச்சாட்டு

எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படும் அச்சம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். 

கேகாலை தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறினார். 

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் நிலவும் நிலையில் அரசாங்கம் தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்துள்ளது. 

நேற்றைய தினம்கூட உற்பத்தி செய்யப்பட வேண்டிய மின்சாரம் 135 மெகாவோட்டால் குறைந்து காணப்படுகின்றன. மின் நிலையத்தின் தரவுகளின்படி அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி அனைத்தும் தரமற்றவையாக காணப்படுகின்றன. 

அரசாங்கத்திற்கு இவை பிரச்சினையாகத் தெரியாவிட்டாலும், நிலக்கரி மின் நிலையத்தால் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதனால், எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. 

இந்த நிலக்கரி மோசடியால் இறுதியில் மின்சாரப் பயனாளர்களே அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதுமட்டுமின்றி தரமற்ற மருந்துகளும் நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன. 

இவ்வாறு போகும் போக்கைப் பார்த்தால், விவசாயிகளின் உரங்களுக்கும் QR குறியீடு வைக்கப்படுமோ என்று அச்சம் காணப்படுகின்றது. 

இந்த அரசாங்கத்தின் ஒழுங்கற்ற, திறனற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும். 

சுற்றுச்சூழல் பாதிப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தியது உண்மையை உணர்த்துவதற்காகவே என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title