Header Logo

செய்திகள்
போதைப்பொருள் சந்தேகத்தில் மற்றொரு படகும் மீட்பு!

Mar 16, 2026 - 08:29 AM -

0

போதைப்பொருள் சந்தேகத்தில் மற்றொரு படகும் மீட்பு!

பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். 

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகு இன்று (16) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அது தொடர்பான விடயங்களை தௌிவுப்படுத்தும் போதே, அவர் இதனை கூறியுள்ளார். 

அந்தப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நேரத்தில் கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகை சற்று முன்னர் கண்டுபிடித்துள்ளனர். 

அதில் உள்ள போதைப்பொருளின் அளவை இப்போதே சரியாகக் கூற முடியாது. படகை கரைக்கு கொண்டு வந்த பின்னரே அது குறித்துத் தெரிவிக்க முடியும். 

இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய 3 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கண்டுபிடித்திருந்தனர். 

அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 7 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title