Header Logo

செய்திகள்
மொஜ்தபா கமேனியை, அலி கமேனியே விரும்பவில்லை?

Mar 16, 2026 - 09:35 AM -

0

மொஜ்தபா கமேனியை, அலி கமேனியே விரும்பவில்லை?

ஈரானின் முன்னாள் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது மகன் தனக்குப் பதிலாகப் பதவியேற்பது குறித்துத் தயக்கங்களைக் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புதிய உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்காவின் சிபிஎஸ் நியூஸ் பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி இதனைத் தெரிவித்துள்ளது. 

தனது மகன் மொஜ்தபா கமேனி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து கமேனி கவலை கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. 

மொஜ்தபா அதிக புத்திசாலி இல்லை என்றும், தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் கருதப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 

மறைந்த அதி உயர் தலைவர் தனது மகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பதை அறிந்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தத் தகவல்கள் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரைச் சார்ந்த ஒரு சிறிய வட்டத்திற்கு பகிரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 

56 வயதான அயதுல்லா மொஜ்தபா கமேனி, கடந்த வார இறுதியில் ஈரானின் புதிய அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

title