Mar 16, 2026 - 10:56 AM -
0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக எடையுள்ள குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 632 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருளுக்கு மேலதிகமாக, சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட மருந்துத் தொகுதிகளும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
