Header Logo

இந்தியா
செட்ஜிபிடியை முந்திய இந்தியன் ஒயில் நிறுவனம்!

Mar 16, 2026 - 01:51 PM -

0

செட்ஜிபிடியை முந்திய இந்தியன் ஒயில் நிறுவனம்!

ஈரான் - அமெரிக்கா போரால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

ஹார்முஸ் நீரிணையை மூடியதால் அந்த வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. 

இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு பெரிதும் இறக்குமதியை நம்பியுள்ளது. இதனால், ஈரான் - அமெரிக்கா போரால் இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதால் ஹோட்டல்கள் பலவும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைத்தாலும் மக்கள் அச்சத்தில் அதிக அளவில் புக்கிங் செய்ய ஆரம்பித்துள்ளனர். 

செல்போன் எண் மூலமாக பதிவு செய்ய முடியவில்லை எனக் கூறி நிறுவனங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்யத் தொடங்கினர். 

இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இந்தியன் ஒயில் நிறுவனத்தின் இந்தியன் ஒயில் ஒன் செயலி முதலிடம் பெற்றுள்ளது. 

பிரபல ஏஐ செயலியான செட்ஜிபிடி இந்த பட்டியலில் நீண்ட காலமாக முதலிடம் பெற்ற நிலையில், இந்தியன் ஒயில் செயலி செட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

title