Mar 16, 2026 - 06:44 PM -
0
பேருவளைக் கடற்பரப்பில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடி படகிலிருந்து 250 கிலோ கிராமிற்கும் அதிக எடையுள்ள கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மீன்பிடிப் படகில் இருந்த 6 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட அந்தப் படகு, இன்று (16) பிற்பகல் திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
