Header Logo
Mogo Academy

பல்சுவை
கள்ளக்காதலன் பேச்சை கேட்டு இளம்பெண் செய்த கொடூரம்!

Mar 16, 2026 - 06:59 PM -

0

கள்ளக்காதலன் பேச்சை கேட்டு இளம்பெண் செய்த கொடூரம்!
Mobitel inner

இந்தியாவின் பீகாரின் முஜப்பர்பூரில் மூன்று வயது சிறுமியின் உடல் சூட்கேஸில் கிடந்த சம்பவத்தில், குழந்தையின் தாயே குற்றவாளி என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கஜல் என்ற 26 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது 3 வயது மகள் மிஸ்டி குமாரியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். 

கஜல் தனது கணவர் மனோஜ் குமாரை விட்டு விலகி, தனது கள்ளகாதலனுடன் வாழத் திட்டமிட்டிருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு வெளி உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. காதலன் தன்னுடன் குழந்தையை அழைத்துச் செல்வதை விரும்பவில்லை எனக் கூறியதால், குழந்தையை கொலை செய்ய முடிவு செய்ததாக பொலிஸிடம் தெரிவித்துள்ளார். 

23 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2024 இல் கஜல் தனது மகளின் தொண்டையை கத்தியால் அறுத்துக் கொலை செய்தார். பின்னர் உடலை சிவப்பு ட்ராலி சூட்கேஸில் போட்டு, வீட்டின் அருகே உள்ள புதரில் வீசியுள்ளார். உடல் முஜப்பர்பூரின் மினாபூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. 

இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், பொலிஸ் சிறப்பு விசாரணை குழு அமைத்தது. Forensic குழு வீட்டை சோதனையிட்டபோது, அறை தரையில், சிங்கில் மற்றும் டெரஸில் இரத்த கறை தடயங்கள் கண்டறியப்பட்டன. 

கஜல் தனது கணவருக்கு "தனது அத்தை வீட்டுக்கு செல்கிறேன்" எனக் கூறிவிட்டு சென்றதால், கணவர் மனோஜ் பொலிஸில் புகார் அளித்தார். பொலிஸ் அவரது போன் லொகேஷனை கண்காணித்து, கள்ளக் காதலனின் வீட்டில் கைது செய்தனர். 

கஜல் தனியாகவே இந்தக் கொலையைச் செய்ததாகவும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான க்ரைம் பேட்ரோல் நிகழ்ச்சியில் கண்ட சில எபிசோட்களால் ஈர்க்கப்பட்டு, உடலை சூட்கேஸில் போட்டு வீசும் ஐடியாவைப் பெற்றதாகவும் பொலிஸிடம் கூறியுள்ளார். 

கொலை ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளது. காதலனுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்பதால் அவரை கைது செய்யவில்லை என முஜப்பர்பூர் நகர பொலிஸார் தெரிவித்தனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara