Header Logo

செய்திகள்
QR குறியீட்டை வார இறுதியில் அறிமுகப்படுத்தியதற்கான காரணம் வௌியானது

Mar 16, 2026 - 11:01 PM -

0

QR குறியீட்டை வார இறுதியில் அறிமுகப்படுத்தியதற்கான காரணம் வௌியானது

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வரிசைகளை உருவாக்க வேண்டாம் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 

விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர், இந்த முறையான மேலாண்மை செயல்முறைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 

தற்போதைய உலகளாவிய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், நாட்டின் எரிபொருள் கையிருப்பைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கும் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். 

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற நெரிசலைத் தவிர்ப்பதற்காக, QR குறியீடு மூலம் எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டத்தை வார இறுதி நாட்களிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

வாகன உரிமை மாற்றம் மற்றும் மொபைல் போன் எண்கள் தொடர்பான முறைமையில் இதற்கு முன்னர் காணப்பட்ட சிக்கல்களுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. 

அத்துடன், முறைமையிலிருந்து வாகனங்களை நீக்கும் வசதியும் தற்போது முறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

நாளை காலைக்குள் அனைத்து தொழில்நுட்பத் தடைகளும் நீக்கப்பட்டு மக்கள் எளிதாக சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மேலும் குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ

காணொளி
ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

title