Header Logo

இந்தியா
ரஜினியை விமர்சித்து பேசிய ஆதவ் அர்ஜுனா - அண்ணாமலை கடும் கண்டனம்

Mar 17, 2026 - 07:50 AM -

0

ரஜினியை விமர்சித்து பேசிய ஆதவ் அர்ஜுனா - அண்ணாமலை கடும் கண்டனம்

நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். 

இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். 

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். 

அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம். 

அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும். 

தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார். 

அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

title