Header Logo
SLIC
கிழக்கு
சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்திற்கு நீதிமன்ற குழுவினர் விஜயம்!

Mar 17, 2026 - 11:03 AM

சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்திற்கு நீதிமன்ற குழுவினர் விஜயம்!
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (17) களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

கடந்த மார்ச் 09 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பிரதேசத்தினை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக குழுவினர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட போது அப்பிரதேசம் குற்றப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்புப் பட்டிகள் இடப்பட்டிருந்த நிலையில் அந்த பாதுகாப்பு பட்டிகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டமையால் குறித்த பிரதேசத்தினை நீதவான் பரிசீலனை செய்வதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. 

அந்தத் தீர்மானத்திற்கமைய இன்றைய குறித்த விஜயம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது குறித்த வழக்கின் சட்டத்தரணி முபாரக் முஹாசன் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 

எதிர்வரும் 30 ஆம் திகதி குறித்த அகழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான தோதான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பில் குறித்த சட்டத்தரணி முபாரக் முஹாசன் தெரிவிக்கையில், 

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கானது கடந்த மார்ச் 09 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திலே மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது நீதமன்றத்தினால் ஆக்கப்பட்ட கட்டளைகளுக்கமைவாக எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி குறித்த பிரதேசத்தை அகழ்வதென மன்றினால் கட்டளையாக்கப்பட்டது. 

அதன் நிமித்தம் கடந்த தினத்திலே நீதிமன்றிலே பிரசன்னமாகியிருந்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் சட்த்தரணிகள், பாதிக்கப்பட்டோர் குறித்த மனிதப் புதைகுழி அமைந்துள்ளாக நம்பப்படுகின்ற பிரதேசத்திற்கு களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்கள். 

ஏலவே கௌரவ மன்றினால் மன்றினால் அப்பிரதேசம் ஒரு குற்றப் பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டு பொலிஸாரினால் பாதுகாப்புப் பட்டிகள் இடப்பட்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் உள்ளிட்டோர் மேற்கொண்ட அந்த கள விஜயத்தின் போது அந்தப் பாதுகாப்புப் பட்டிகள் அகற்றப்பட்டு பௌதீக ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றிருப்பது தொடர்பிலும் அவதானிக்கப்பட்டது. 

இதன்பிரகாரம் நகர்த்தல் பிரேரணை மூலம் குறித்த விடயத்தை மன்றுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து இன்று கௌரவ மன்றினால் குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயமொன்று மேற்கொள்ளப்படடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அந்த வகையிலே பொலிஸாரினால் இடப்பட்டிருந்த பிளாஸ்டிக் பட்டிகள் அகற்றப்பட்டிருப்பதோடு, அங்கிருந்த மரமொன்றும் அகற்றப்பட்டிருந்தது. ஆனால் அவை சந்தேகத்திற்கிடமான புதைகுழி அமையப்பட்டதான அந்த இடத்திலே எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை என்று கௌரவ மன்று திருப்தியடைந்துள்ளது. 

அந்த வகையிலே எதிர்வரும் 30 ஆம் திகதி குறித்த அகழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான தோதான கட்டளைகளை மன்று ஆக்கியிருக்கின்றது என்று தெரிவித்தார்.


MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278