Mar 17, 2026 - 03:33 PM -
0
ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர் ஈரானின் பாதுகாப்புத் தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக இருந்தமையால், இந்த மரணம் தற்போதைய போர்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
அவர் 2025 ஓகஸ்ட் மாதத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் (SNSC) செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில், அவர் ஈரான் ஜனாதிபதியினதும் மற்றும் மறைந்த உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியினதும் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் 2008 முதல் 2020 வரை 12 வருடங்களாக ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றிய ஒரு செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஆவார்.
அலி லாரிஜானி ஆரம்பத்தில் தீவிரக் கொள்கை உடையவராகத் தோன்றினாலும், பிற்காலத்தில் அவர் ஒரு "மிதவாத" தலைவராகக் கருதப்பட்டார்.
அத்துடன், 2005 மற்றும் 2007 காலப்பகுதியில் அவர் ஈரானின் பிரதான அணுசக்தி பேச்சுவார்த்தையாளராக சர்வதேச மட்டத்தில் செயற்பட்டுள்ளார்.
