Header Logo

செய்திகள்
60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து: சாரதி காயம்

Mar 17, 2026 - 06:35 PM -

0

60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து: சாரதி காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - போடைஸ் பிரதான வீதியில், பட்டல்கலை பகுதியில் இன்று (17) பிற்பகல் 2 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதன் சாரதியும் காயமடைந்துள்ளார்.

கொட்டகலை பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக புளியாவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்தின் போது வர்த்தகத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட சவர்க்காரம், சலவைத்தூள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் காணப்பட்டன.

விபத்து நிகழ்ந்தவுடன் பிரதேசவாசிகள் உடனடியாகச் செயற்பட்டு, குடைசாய்ந்திருந்த முச்சக்கரவண்டியினை மீட்டுச் சாரதியைக் காப்பாற்றியுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க மயக்கம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

title