Header Logo

செய்திகள்
QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு வேண்டுகோள்

Mar 17, 2026 - 07:21 PM -

0

QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு வேண்டுகோள்

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.


தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் தமக்குரிய QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார். அதன்படி, இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் QR குறியீட்டைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


பதிவு செய்யும் போது மிகச் சிறியளவிலானோருக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் முயற்சிப்பதன் மூலம் இந்த QR குறியீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


"மிகச் சிறியளவிலானோர் இன்றும் எம்மிடம் தம்மால் பதிவு செய்ய முடியவில்லை என வினவினார்கள். அவர்கள் நேற்று தான் அதனைப் பார்த்திருக்கிறார்கள், இன்று பார்க்கவில்லை என்பது எமக்குத் தெரிகிறது. எனவே இன்று மீண்டும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பொதுவாக ஒரு மணித்தியாலத்திற்கு 30,000 பேர் புதிதாகப் பதிவு செய்து வருகின்றனர். அந்த நேரத்தில் ஏனையோருக்கு 'Error' செய்தி வரலாம். ஆனால் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 30,000 பேர் பதிவாகின்றனர். ஏனெனில் நாம் இப்போது பெரும்பாலான சிக்கல்களைத் தீர்த்துள்ளோம்.


புதிய QR ஒன்று வராது. நாம் சுமார் 2 மில்லியன் தரவுகளை முறைமையிலிருந்து அழித்துள்ளோம். இப்போது மிகச் சிறியளவிலானோரே 'Inactive' எனக் காட்டப்படுகின்றனர். எனவே அந்தப் பிரிவினர் மீண்டும் பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள். QR ஒதுக்கீடு (Quota) இந்த வார இறுதியில் முடிவடைவதால், QR குறியீட்டைச் சீர்செய்து உங்களுக்குரிய எரிபொருள் அளவைப் பெற்றுக்கொள்ளுங்கள்."


அத்துடன், சில தரப்பினரிடம் உள்ள வாகன பதிவுச் சான்றிதழ் முறையாக மாற்றப்படாமல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதற்காகப் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.


இதன்படி, 9 மாகாணங்களுக்கும் 9 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதன் ஊடாக அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் செய்து கொடுக்கப்படும்.


"சிலரது வாகன பதிவுச் சான்றிதழ் சட்டபூர்வமாக மாற்றப்படவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவை எந்தத் தரவுகளிலும் பதிவாகாது. அத்தகையவர்களுக்காக 9 மாகாணங்களுக்கும் 9 இலக்கங்களை இன்று மாலை அறிவிப்போம். அந்த இலக்கங்களுக்கு எத்தகைய விபரங்களை அனுப்ப வேண்டும் என்பதையும் இன்று அறிவிப்போம். உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு வட்ஸ்எப் ஊடாகத் தகவல்களை அனுப்பினால், அந்தத் தரவுகளைப் பரிசீலித்து மீண்டும் அதனைச் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

title