Header Logo

செய்திகள்
ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு ஆரம்பம்

Mar 17, 2026 - 08:00 PM -

0

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு ஆரம்பம்

ஜனாதிபதி பங்குபெற்றும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

 

அதன் நேரடி ஒளிபரப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. 

அங்கு ஜனாதிபதி ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள் வருமாறு: 

"எரிபொருளுக்காக நாம் நீண்டகால டெண்டர்களை வழங்கியிருந்தோம். எனினும், குறிப்பாக தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு நீண்டகால டெண்டர் கப்பல்களை உரிய காலத்திற்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது. எமது தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒரு கப்பலும் உரிய நேரத்திற்கு வராது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தில் ஒரு குறைபாடு காணப்படுகிறது. ஒரு கப்பல் தாமதமானாலும் அது முழு விநியோக வலையமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் இலக்கு வைத்த எரிபொருள் விநியோகம் எமக்குக் கிடைக்கவில்லை. 

தற்போது நாம் இராஜதந்திர மட்டத்தில் சில தலையீடுகளைச் செய்துள்ளோம். இரண்டாவதாக, சில அவசர டெண்டர்களைக் கோரியுள்ளோம். டீசல், கச்சா எண்ணெய், மசகு எண்ணெய் மற்றும் பெற்றோல் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று நாம் கோரிய டெண்டர்களுக்கு மிக நம்பிக்கையான விநியோகஸ்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

டொலர்களில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களது வர்த்தகத் தேவைக்கான எரிபொருளை அவர்களே இறக்குமதி செய்துகொள்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளோம். 

மார்ச் மாதத்திற்கான எரிவாயுத் தேவை 33,000 மெட்ரிக் தொன்னாக இருந்த போதிலும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தைத் தடை செய்துள்ளமையால் நாம் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்திருந்தோம். அந்த 38,000 மெட்ரிக் தொன்னும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் ஒரு எரிவாயு கப்பலை நாம் ஓடர் செய்துள்ளோம், அது நாளை அல்லது மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது. எனவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது. 

எரிவாயு, நிலக்கரி மற்றும் எரிபொருளை எமது இராஜதந்திர உறவுகள் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்குப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

QR குறியீடு முறைமையில் சில சிக்கல்கள் இருப்பதை நாம் அறிவோம். சில சிக்கல்கள் எழும் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் ஞாயிற்றுக்கிழமை தினத்தை இதற்காகத் தேர்ந்தெடுத்தோம். தற்போது 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இதில் பதிவு செய்துள்ளனர். தேசிய கட்டமைப்பு ரீதியில் சிக்கல்கள் வரக்கூடும் என்பதைத் தெரிந்தே நாம் இதனை முன்னெடுத்தோம்."

 

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

title