Mar 18, 2026 - 04:41 PM -
0
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டம் சுந்தர்நகர் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஹோட்டலில் தங்கியுள்ளவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்ற பொலிஸார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் ஹோட்டலில் தங்கி இருந்த புதுமணத் தம்பதி போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புதுமணத் தம்பதியை கைது செய்த பொலிஸார் அவர்களிடமிருந்து 21 கிராம் போதைப்பொருளையும், 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
புதுமணத் தம்பதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மண்டி மாவட்டத்தை சேர்ந்த அருண் பாட்தி , பெர்ல் என்பதும், இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட புதுமணத் தம்பதியை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
