Header Logo

செய்திகள்
நுரைச்சோலை மின் உற்பத்தி வீழ்ச்சி தொடர்பில் வௌியான தகவல்

Mar 18, 2026 - 10:34 PM -

0

நுரைச்சோலை மின் உற்பத்தி வீழ்ச்சி தொடர்பில் வௌியான தகவல்

தரமற்ற நிலக்கரி பயன்பாடு காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைக்குரிய பின்னணியில், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைவடைந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த மார்ச் 03 ஆம் திகதி நிலக்கரி எரிப்பு மூலம் 34.2 ஜிகாவோட் (GW) மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. 

எனினும், நேற்று (17) அந்த அளவு 26.2 ஜிகாவோட் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 

நிலக்கரி மின் உற்பத்தி குறைந்த போதிலும், மார்ச் 3ஆம் திகதி 18.7 ஜிகாவோட் ஆக இருந்த டீசல் மின் உற்பத்தித் திறன், மார்ச் 17 ஆம் திகதி 26 ஜிகாவோட் ஆக அதிகரித்துள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இக்காலகட்டத்தில், மின் உற்பத்திக்காக டீசல் மின் நிலையங்கள் அதிக பங்களிப்பை வழங்குவது, தொடர்ச்சியான மின் விநியோகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

title