Header Logo

செய்திகள்
ஈரான் போர்: 200 பில்லியன் டொலர் நிதியை கோருகிறது பென்டகன்

Mar 19, 2026 - 10:33 AM -

0

ஈரான் போர்: 200 பில்லியன் டொலர் நிதியை கோருகிறது பென்டகன்

ஈரான் உடனான போர்ச் சூழலை எதிர்கொள்வதற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை அங்கீகரிக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெள்ளை மாளிகையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வொஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையை மேற்கொள் காட்டி நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்தத் தொகையானது ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமானது எனக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது போருக்காகப் பயன்படுத்தப்படும் தீர்மானமிக்க ஆயுதங்களின் உற்பத்தியை உடனடியாக அதிகரிப்பதே இந்த நிதி கோரிக்கையின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் பென்டகன் பல்வேறு நிதி ஒதுக்கீட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், இந்த புதிய கோரிக்கையானது அமெரிக்க காங்கிரஸில் கடும் அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என வொஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

title