Header Logo

இந்தியா
ரீல்ஸ் வீடியோவுக்காக தந்தையை சாக்கு மூட்டையில் கட்டிய பெண்

Mar 19, 2026 - 02:08 PM -

0

ரீல்ஸ் வீடியோவுக்காக தந்தையை சாக்கு மூட்டையில் கட்டிய பெண்

இந்தியாவின் பெங்களூருவில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை தட்டிக் கேட்கிறோம், தடுத்து நிறுத்துகிறோம் எனக்கூறி பெற்ற தந்தையை சாக்குப் பையில் கட்டி கொரியரில் அனுப்ப முயன்ற பெண் பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ளார். குடும்பத்தோடு சேர்ந்து ரீல்ஸ் எடுப்பதாக விபரீத செயலில் ஈடுபட்டு வில்லங்கத்தை தேடிக் கொண்டதன் பின்னணி என்ன? 

பெங்களூருவின் விநாயகா சர்க்கிள் ஏரியாவில் உள்ள கொரியர் அலுவலகத்திற்கு, சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேருடன் சேர்ந்து, ஒரு சாக்கு மூட்டையை தூக்கி வந்தனர். மூட்டையை கீழே இறக்கி வைத்தவர்கள், சார் சார் இந்த பார்சலை மங்களூருக்கு அனுப்ப வேண்டும் பில் எவ்வளவு வரும்? என கேட்டுள்ளனர். 

அப்போது சாக்கு மூட்டையில் ஏதோ அசைவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஊழியர்கள், மூட்டைக்குள் என்ன இருக்கிறது? என கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் இளம்பெண்ணும் அவருடன் வந்தவர்களும் மௌனமாக நின்றனர். இதனால் சந்தேகம் அடைந்த கொரியர் நிறுவன ஊழியர்கள், சாக்கு மூட்டையை அவிழ்த்து திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்து முதியவர் ஒருவர் எழுந்து நின்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

என்னம்மா இது? என கேட்டதற்கு, பார்சலை மங்களூருக்கு அனுப்ப வேண்டும். உள்ளே ஆள் இருந்தால் உங்களுக்கு என்ன? பணம் கொடுக்கிறோம் என பிடிவாதம் பிடித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் பொலிஸில் புகாரளிக்கப் போகிறோம் என எச்சரித்துள்ளனர். 

உடனே பல்லை காட்டிய இளம்பெண், சார் சார் ரீல்ஸ் வீடியோ எடுக்கத்தான் இப்படி செய்தோம். ஆம்னி பேருந்து கட்டண உயர்வுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, எனது தந்தையை கொரியரில் அனுப்பி அதை ரீல்ஸ் வீடியோவாக எடுக்க முயன்றேன் எனக் கூறியுள்ளார். ரீல்ஸ் வீடியோவுக்காக சொந்த அப்பாவையே சாக்கு மூட்டையில் கட்டிய இளம்பெண்ணின் மனநிலையைக் கண்ட ஊழியர்கள், பொலிஸாருக்கு உடனடியாக அழைப்பை செய்து குடும்பத்தோடு சிக்க வைத்துள்ளனர். 

சோஷியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்ற மிதப்பில் இப்படியொரு விபரீத செயலில் ஈடுபட்டதை கடுமையாகக் கண்டித்த பொலிஸார், இனி இதுபோல நடந்து கொள்ள மாட்டோம் என மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ரீல்ஸ் மோகத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கும்மியடித்து, வில்லங்கத்தை தேடும் நபர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.

Comments
0

MOST READ

காணொளி
ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

title