Header Logo

செய்திகள்
வசந்த முதலிகேவின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Mar 19, 2026 - 05:53 PM -

0

வசந்த முதலிகேவின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2022ஆம் ஆண்டு 'அரகலய' போராட்டக் காலத்தில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அப்போதைய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், பொலிஸார் அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது. 

தடுப்புக்காவலில் இருந்த வசந்த முதலிகே சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த பின்னர், நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர்நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா இந்தத் தீர்ப்பை வழங்கினார். 

2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அதன் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குத் தேவையான நியாயமான சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பிரதிவாதிகள் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டியது. 

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க பிரதிவாதிகள் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதற்கான தீர்மானத்தை நியாயப்படுத்த பிரதிவாதிகள் தவறியுள்ளனர் என்றும், இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 13(1) ஆகிய உறுப்புரைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை, பேலியகொடை விசேட விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஜி.ஏ.கே. கமகே மீறியுள்ளார் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காவிந்த பியசேகர உள்ளிட்டோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

title