Mar 19, 2026 - 08:11 PM -
0
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து, விமான நிறுவனத்தின் சர்வதேச பிணைமுறி மறுசீரமைப்புப் பணிகளை 99% க்கும் அதிகமான பங்களிப்புடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
இது அந்த விமான நிறுவனத்தின் மீட்சிப்பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்த உடன்படிக்கையின்படி, 16% கடன் தள்ளுபடி மற்றும் புதிய பிணைமுறைகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கும், இலங்கையின் ஒட்டுமொத்த கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் வலுசேர்க்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து, 175 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சர்வதேச பிணைமுறிகளை மறுசீரமைக்கும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
அதற்கமைய பிணைமுறி வைத்திருப்பவர்கள் தங்களின் முதலீடுகளைப் பணமாகவும், 4 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்ட புதிய அமெரிக்க டொலர் பிணைமுறிகளாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் ஒட்டுமொத்த நிலுவைத் தொகையில் 16 சதவீதக் குறைப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
