Header Logo
Mogo Academy

பல்சுவை
உயிருக்கு பயந்து மனைவியை காதலனுக்கு தாரை வார்த்த கணவன்!

Mar 20, 2026 - 01:05 PM -

0

உயிருக்கு பயந்து மனைவியை காதலனுக்கு தாரை வார்த்த கணவன்!
Mobitel inner

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத குழந்தை உள்ளது. 

ராஜ்குமாரின் மனைவிக்கும் வேறொரு கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. 

 

இதனால் அவரது மனைவி ராஜ்குமாரிடம் சண்டையிட்டுக் கொண்டு அடிக்கடி வெளியே சென்று கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்தார். 

மனைவி அடிக்கடி தன்னிடம் சண்டையிட்டுக் கொண்டு வெளியே செல்வதால் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து மனைவியிடம் கேட்டபோது உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று எதிர் கேள்வி எழுப்பியதால் ராஜ்குமார் அடங்கிப் போனார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரின் மனைவி அவரது கள்ளக்காதலனுடன் தொலைபேசி பேசிக்கொண்டிருந்தார். 

இதனைக் கண்ட ராஜ்குமார் மனைவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார். மனைவி கள்ளக்காதலனுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவரது தொலைபேசியை பிடுங்கினார். தொலைபேசியில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தன. 

மனைவியின் தொலைபேசியில் உள்ள பேஸ்புக்கை திறந்து பார்த்தபோது, அதில் ஏராளமான கள்ளக்காதல் கொலை கதைகள் இருந்தன. 

குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது கணவர் சவுரப்பை 15 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து சிமெண்டால் மூடப்பட்ட செய்தி இருந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் இது குறித்து அவரது மனைவியிடம் கேட்டார். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. 

ராஜ்குமார் உடனே பஞ்சாயத்தை கூட்டினார். பஞ்சாயத்தார் ராஜ்குமாரின் மனைவியிடம் கேட்டபோது, தான் கள்ளக்காதலுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறினார். 

மனைவியுடன் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எண்ணிய ராஜ்குமார் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தார். 

எனக்கு இந்த மனைவி வேண்டாம். அவளை அவளுடைய காதலனுடன் அனுப்பி வையுங்கள் என கூறினார். இதனை கேட்டு ராஜ்குமாரின் மனைவி சந்தோஷமாக கள்ளக்காதலன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். 

மனைவியிடம் இருந்து உயிர் தப்பிய ராஜ்குமார் சோகத்துடன் வீட்டிற்கு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara