Header Logo

செய்திகள்
76 இந்தோனேசியர்கள் நீர்கொழும்பில் கைது

Mar 20, 2026 - 11:53 PM -

0

76 இந்தோனேசியர்கள் நீர்கொழும்பில் கைது

நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் இன்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், அதன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் சுற்றுலா விசா மற்றும் வணிக விசா வசதிகளின் கீழ் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், அவர்களில் 36 பேரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஏனைய 40 இந்தோனேசியர்களும் விசா நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜவின் அறிவுறுத்தலின் பேரில், இவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

title