Header Logo

செய்திகள்
முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் கோரிக்கை

Mar 22, 2026 - 10:17 AM -

0

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் கோரிக்கை

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. 

இன்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார்.

 "இன்று முதல் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு எமது சேவைக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. எமது சேவையை முன்னெடுக்க எரிபொருள் இல்லை, அதற்கு மேல் அரசாங்கம் விலைகளையும் அதிகரித்துள்ளது. 'மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது' போன்ற நிலையே இது. முச்சக்கரவண்டி கட்டணத்தின் முதலாவது கிலோமீற்றருக்காக 20 ரூபாயை அதிகரிக்குமாறு நாங்கள் முன்மொழிகிறோம். மீற்றர்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த முடியும். நிலவும் நிலைமை குறித்துத் தெரிவிப்பதற்காக விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வரவுள்ளோம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ

காணொளி
அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

நூற்றாண்டு விழாவை  முன்னிட்டு விசேட நடைபவனி

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட நடைபவனி

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

title