Mar 22, 2026 - 09:51 PM -
0
ஈரானுக்கு எதிரான போருக்கான நிதியை வொஷிங்டனால் வழங்கும் வசதி உள்ளதாகவும், இதற்காக வரிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போருக்கு நிதி வழங்க எங்களிடம் ஏராளமான பணம் உள்ளது என்று கூறிய அவர், பென்டகன் கோரியுள்ள மேலதிக வரவுசெலவுத் திட்டம் இராணுவத்தின் எதிர்காலத் திறன்களை மேம்படுத்துவதற்காகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தைப் போலவே, தற்போதைய இரண்டாவது பதவிக்காலத்திலும் இராணுவத்தை பலப்படுத்தியுள்ளார்.
இராணுவம் எதிர்காலத்தில் சிறந்த முறையில் விநியோகங்களைக் கொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்த விரும்புகிறார் என பெசென்ட் குறிப்பிட்டார்.
எனினும், 200 பில்லியன் டொலர் என்ற தொகையை அவர் உறுதிப்படுத்தவில்லை.
கடந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கோரப்பட்டுள்ள இந்த மேலதிக நிதிக்கு அமெரிக்கக் காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி, சில குடியரசுக் கட்சியினரும் இதற்கானத் தேவையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
