Header Logo

செய்திகள்
பதுளை வைத்தியசாலையில் மற்றொரு அதிசய அறுவை சிகிச்சை

Mar 23, 2026 - 08:50 PM -

0

பதுளை வைத்தியசாலையில் மற்றொரு அதிசய அறுவை சிகிச்சை

வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக இரும்புக்கம்பி வெளியே வந்த நிலையில், மிக மோசமான விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரைப் பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளனர். 

இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 37 வயதுடைய ஒருவராவார். 

விபத்துக்குள்ளான நபர் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ உள்ளிட்ட வைத்தியக் குழுவினர், அந்த இரும்புக் கம்பியின் ஒரு பகுதியை வெட்டி அகற்றிவிட்டு, காயமடைந்தவரை அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

பின்னர், வைத்தியர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டபோது, உடலினுள் இருந்த இரும்புப் பகுதிகளை முழுமையாக அகற்றியுள்ளனர். 

முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்கச் சென்றபோது கிளை முறிந்ததால், இந்த நபர் அங்கிருந்த கொன்க்ரீட் மதில் ஒன்றின் மீது விழுந்துள்ளார். இதன்போது மதிலில் இருந்த இரும்புக் கம்பி ஒன்று அவரது உடலைப் துளைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

நூற்றாண்டு விழாவை  முன்னிட்டு விசேட நடைபவனி

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட நடைபவனி

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

title