Header Logo
Mogo Academy

பல்சுவை
இன்ஸ்டா, யூடியூப்-க்கு 55 கோடி ரூபா அபராதம்!

Mar 27, 2026 - 06:22 PM -

0

இன்ஸ்டா, யூடியூப்-க்கு 55 கோடி ரூபா அபராதம்!
Mobitel inner

அமெரிக்காவில் பயனர்களை அடிமையாக்கும் வகையில், சமூக ஊடகங்களை உருவாக்கி இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்திய மதிப்பில் சுமார் 55 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பை அதிக நேரம் பயன்படுத்தியதால், தனது மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், பயனர்களை அதிக நேரம் பயன்படுத்த தூண்டும் வகையில், சில அம்சங்கள் அதில் இருப்பதாகவும் கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். 

இதனை விசாரித்த நீதிமன்றம், இளம்பெண்ணின் மனநலம் பாதிக்கப்பட்டதற்கு மெட்டா மற்றும் கூகுள் நிறுவனம் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் சமூக ஊடகங்களில் உள்ள வீடியோக்களால் பயனர்கள் ஈர்க்கப்படவில்லை என்றும், அதனை தொடர்ந்து பயன்படுத்த தூண்டும் வகையில் சில அம்சங்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். 

குறிப்பாக, முடிவில்லா ஸ்க்ரோலிங் அம்சம், ஒரு வீடியோ முடிந்த உடன், அடுத்த வீடியோவை பார்ப்பதற்கான தூண்டுதல் ஆகியவை சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கும் என நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக, மெட்டா மற்றும் கூகுள் நிறுவனம் சுமார் 55 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. 

இதில், 70 விழுக்காடு தொகையை மெட்டா நிறுவனமும், 30 சதவிகிதத்தை கூகுள் நிறுவனமும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மெட்டா மற்றும் கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு இருந்தாலும், சமூக ஊடகங்களுக்கு எதிரான முக்கிய தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara