Header Logo
Mogo Academy

பல்சுவை
டேட்டிங் செயலிகளால் கள்ளத்தொடர்புகள் அதிகரிப்பு!

Apr 3, 2026 - 04:50 PM -

0

டேட்டிங் செயலிகளால் கள்ளத்தொடர்புகள் அதிகரிப்பு!
Mobitel inner

இன்றைய நவீன காலத்தில் ஒருவர் காதலில் விழுவதற்கு டேட்டிங் செயலிகளை வைத்திருந்தாலே போதுமானது என்றாகி விட்டது. 

20 ஆண்டுகளுக்கு முன்பு ‘இன்டர்நெட்’, ‘சாட்டிங்’, ‘டேட்டிங்’ போன்றவை எல்லாம் புதுமொழிகளாக இருந்தன. ஆனால், இன்று உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட்போன்களும் அணிவகுக்கும் செயலிகளும் இளைய தலைமுறையினரைக் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன. 

இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் மட்டுமில்லை இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் கூட இந்த நிலைமை வந்துவிட்டது. உலகெங்கும் டேட்டிங் செயலி மூலம் காதலன், காதலியை தேடும் கலாசாரம் அதிகரித்துள்ளது. இப்போது சற்று எல்லை மீறி திருமணத்துக்கு மீறிய உறவை அதிகரிக்கும் நிலை உருவாகி விட்டது. 

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டேட்டிங் செயலி பயன்பாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக திருமணத்துக்கு மீறிய உறவுகள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

டேட்டிங் செயலியை சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்துவதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. அவர்களில் 65 சதவீதம் ஆண்களும், 35 சதவீத பெண்களும் உள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆனவர்களே. டேட்டிங் செயலி பயன்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 148 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

சராசரியாக இத்தகைய டேட்டிங் செயலிகளில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரையில் பயனர்கள் அரட்டையில் ஈடுபடுகின்றனர். இந்த அரட்டையானது மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் உச்சத்தை அடைகிறது. 

இவர்களில் ஆண்கள் 25 வயது முதல் 30 வயது உடைய பெண்களை விரும்புவதாகவும், பெண்களோ 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களை விரும்புவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில் குறிப்பாக பெண்கள் வைத்தியர்கள், ஆடிட்டர்கள் போன்ற பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் உள்ளவர்களையே அதிகம் விரும்புவதாகவும் கூறப்பட்டு உள்ளது. 

டேட்டிங் செயலி பயன்பாட்டில் 18 சதவீத பயனர்களுடன் பெங்களூரு முதலிடத்திலும், 17 சதவீதத்தில் ஐதராபாத் 2 ஆம் இடத்திலும் உள்ளன. டெல்லியில் 11 சதவீதமும், மும்பையில் 9 சதவீதமும் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன்மாத தரவின்படி தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் திருமணம் மீறிய உறவில் இருந்தோர் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

Mobitel Upahara