Header Logo
Mogo Academy

செய்திகள்
2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

Jul 20, 2026 - 09:00 PM -

0

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!
Mobitel inner

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளன. 

இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு, அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும். 

மேலும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர். நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை மத்திய நிலையங்களில், 325 இணைப்பு மத்திய நிலையங்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்பரீட்சைக்கு இம்முறை 147,407 மாணவர்கள் தோற்றியுள்ளனர். 

விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகியவற்றிற்குள் பிரவேசித்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது: 

அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் https://onlineexams.gov.lk/eic இணையத்தளத்தின் 'Personal Account Login' ஊடாக தங்களது பரீட்சை சுட்டிலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறு ஆவணத்தை (Results Schedule) பதிவிறக்கம் செய்ய முடியும். 

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி, https://onlineexams.gov.lk/eic இன் 'School Account Login' பகுதிக்குள் பிரவேசித்து, அந்தந்த பாடசாலையின் முழுமையான பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும். 

அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் தத்தமது வலயத்திற்குரிய பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக பயனர் பெயர்களும் கடவுச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் வினவல்களிருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 

உடனடி அழைப்பு இலக்கம்: 1911 

தொலைபேசி இலக்கங்கள்: 011284208 / 0112784537 / 0112785922 

தொலைநகல் (Fax) இலக்கம்: 0112784422


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara