Header Logo

செய்திகள்
நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை: 512 பேர் கைது

Apr 3, 2026 - 06:03 PM -

0

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை: 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ் 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று (02) முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கைகளின் போது, 29,033 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன்போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 222 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 136 பேரும் இந்த விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,498 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title