Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
கணவனைப் பிரிந்த மகளுக்கு அமோக வரவேற்பு

Apr 6, 2026 - 12:27 PM

கணவனைப் பிரிந்த மகளுக்கு அமோக வரவேற்பு
Mobitel Inner 1278

விவகாரத்து பெற்ற மகளுக்கு மாலை அணிவித்து, மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ள புதுமையான சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. 

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மா. இவரது மகள் பிரணிதா முதுநிலைப் பட்டதாரி. இவருக்கும் ராணுவ அதிகாரி ஒருவருக்கும் கடந்த 2018 இல் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், திருமணமான சில மாத காலத்திலேயே கணவர் வீட்டில் பிரணிதா உடல், மன ரீதியாகக் கொடுமைகளுக்கு ஆளானார். 

ஒரு குழந்தை பிறந்த பின்னரும் நிலைமை மாறாததால், துணிச்சலுடன் விவகாரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார் பிரணிதா. 

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை பிரணிதாவிற்கு விவகாரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

வழக்கமாக, விவகாரத்து என்பது ஒரு சோகமான நிகழ்வாகப் பார்க்கப்படும் நிலையில், பிரணிதாவின் குடும்பத்தினர் அதனை ஒரு புதிய தொடக்கமாகக் கொண்டாடினர். 

நீதிமன்ற வாசலிலேயே அவருக்கு மாலை அணிவித்து, ஆடிப் பாடி உற்சாகத்துடன் தாய் வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். 

இதுகுறித்து தந்தை ஞானேந்திர குமார் தெரிவிக்கையில், 

“மகள் என்பவர் யாருடைய உடைமையும் அல்ல. சமூகம் என்ன சொல்லும் என்று அஞ்சுவதைவிட, நம் மகளின் மகிழ்ச்சியும் கண்ணியமுமே முக்கியம். நரகமாக மாறிய ஒரு வாழ்க்கையிலிருந்து அவர் மீண்டுவந்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

முன்னாள் கணவரிடமிருந்து எவ்வித வாழ்க்கைப் படித்தொகையையோ உடைமைகளையோ எதிர்பார்க்காமல் வெறும் கையுடன் வெளியேறிய பிரணிதா, 

“பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை அமைதியாகச் சகித்துக்கொள்ளக் கூடாது. கல்வி கற்று சொந்தக் காலில் நிற்பதே நமக்கான பாதுகாப்பு,” என்று மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278