Apr 6, 2026 - 07:39 PM -
0
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளை (07) ஹோமாகம வலய இலக்கம் 02 இற்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஹோமாகம நகரம், வேகந்த, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி, கெமுனு மாவத்தை, அத்துருகிரிய வீதி, கலவில வத்தை, நியந்தகல, மாகம்மன, மஹகடுவான, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
நாளை முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 08.00 மணி வரை இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
