Header Logo
Mogo Academy

உலகம்
எரிபொருள் நெருக்கடியால் இருநாள் விடுமுறை!

Apr 5, 2026 - 06:37 PM -

0

எரிபொருள் நெருக்கடியால் இருநாள் விடுமுறை!
Mobitel inner

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. 

இதில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிறத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

மேற்காசியாவில் காணப்படும் நீண்டகால மோதல் போக்கால், எரிபொருள் தட்டுப்பாடு பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. 

இதனை தொடர்ந்து, நேபாள அரசு இன்று (5) கூடி அதுபற்றி ஆலோசனையில் ஈடுபட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

நேபாளத்தின் காத்மண்டு நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. 

இதில், சனி மற்றும் ஞாயிறு என வாரத்திற்கு இரு நாட்கள் விடுமுறை விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி மையங்கள் நாளை முதல், இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட உள்ளது. 

கல்வி மையங்கள் தவிர்த்து, அரசு அலுவலகங்கள் அனைத்தும் வேலை நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 

இதேபோன்று, பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவது பற்றியும் தேவையான கட்டமைப்பை சட்ட முறைப்படி உருவாக்கவும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara