Apr 6, 2026 - 11:03 PM -
0
இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 3,380,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு இலங்கைச் சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றினைப் பரிசோதித்த போதே இவை கண்டறியப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றே இவ்வாறு பரிசோதிக்கப்பட்டது.
அக்கொள்கலனின் ஆவணங்களில் 'படுக்கை விரிப்புகள்' (Bed sheets) எனத் தெரிவித்து இந்தச் சிகரெட் கையிருப்பு கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தச் சட்டவிரோத சிகரெட்டுகளின் மொத்தப் பெறுமதி 507 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 460 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முகவரிக்கு இந்தக் கொள்கலன் கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
