Header Logo

செய்திகள்
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

Apr 7, 2026 - 07:21 AM -

0

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார் 250 பேருந்துகள் வரை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் பல பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தவும் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இந்த விசேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. 

பயணிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் இலங்கை புகையிரத திணைக்களமும் புத்தாண்டு நிமித்தம் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. 

கரையோர மார்க்கம், வடக்கு மற்றும் பிரதான மார்க்கங்களில் தற்போது பயணிக்கின்ற புகையிரதங்களுக்கு மேலதிகமாக மேலும் சில விசேட புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

title