Header Logo
SLIC
உலகம்
லெபனான் மீதான தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

Apr 9, 2026 - 12:07 PM

லெபனான் மீதான தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
Mobitel Inner 1278
EDEX Inner

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். 

இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். 

பொதுச்செயலாளர் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவரது ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்,

"பொதுமக்களின் உயிரிழப்புகளை பொதுச்செயலாளர் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொதுமக்களின் மரணங்கள் குறித்து அவர் மிகுந்த கவலை கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். 

லெபனானில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த இராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்கு "பாரிய அச்சுறுத்தலை" ஏற்படுத்துவதாகவும் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மோதல்களை நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் அவர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மோதலுக்கு எந்தவொரு "இராணுவ தீர்வும்" கிடையாது என்பதையும் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278