Header Logo
Mogo Academy

செய்திகள்
ஈரான் போர்ச் சேதம் 270 பில்லியன் டொலராக உயர்வு

Apr 14, 2026 - 06:33 PM -

0

ஈரான் போர்ச் சேதம் 270 பில்லியன் டொலராக உயர்வு
Mobitel inner

ஈரான் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளைப் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான முயற்சியாக, அந்தச் சேதங்களின் மதிப்பைக் கணக்கிட்டு வருவதாக ஐஆர்ஜிசி உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி, ஒரு முதற்கட்ட மற்றும் தோராயமான மதிப்பீட்டின்படி இந்தத் தொகை இதுவரை சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர் எனத் தெரிவித்துள்ளார். 

எனினும், இது மாற்றமடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஈரான் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடுகளைச் செய்து வருவதாக தஸ்னிம் செய்தியை மேற்கோள்காட்டி அவர் மேலும் கூறியுள்ளார். 

கடந்த வார இறுதியில் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழப்பீடு கோருவது முக்கிய விவகாரங்களில் ஒன்றாக இருந்ததாக மொஹஜெரானி கூறியுள்ளதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்ற போதிலும், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara