Header Logo

வணிகம்
Blue Lotus 360 உடனான முக்கியமான ஒத்துழைப்புடன் தனது டிஜிட்டல் வங்கிச்சேவைக் கட்டமைப்பை DFCC iCONNECT வலுப்படுத்தியுள்ளது

Apr 16, 2026 - 10:42 AM -

0

Blue Lotus 360 உடனான முக்கியமான ஒத்துழைப்புடன் தனது டிஜிட்டல் வங்கிச்சேவைக் கட்டமைப்பை DFCC iCONNECT வலுப்படுத்தியுள்ளது

JKX மற்றும் Platned UK ஆகியவற்றின் பக்கபலம் கொண்ட, ஒரு முன்னணி ERP தீர்வுகள் வழங்கல் நிறுவனமான Blue Lotus 360 உடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள முக்கியமான ஒத்துழைப்பினூடாக, தனது நிறுவனரீதியான டிஜிட்டல் வங்கிச்சேவைக் கட்டமைப்பை DFCC வங்கி பிஎல்சி மேலும் வலுப்படுத்தியுள்ளது. DFCC வங்கியின் டிஜிட்டல் வங்கிச்சேவைத் தளம் மற்றும் நிறுவன வளத் திட்டமிடல் (ERP) கட்டமைப்புக்கள் ஆகியவற்றுக்கு இடையில் சீரான ஒருங்கிணைப்பிற்கு இந்த ஒத்துழைப்பு இடமளிக்கின்றது. அதன் மூலமாக, செயல்திறன் மேம்பாடு மற்றும் வேகம் ஆகியவற்றுடன் தன்னியக்கமயமாக்கப்பட்ட வழிமுறையில் நிதித் தொழிற்பாடுகளை முன்னெடுக்க வணிகங்களுக்கு இடமளிக்கின்றது. 

நிறுவனங்கள் தமது டிஜிட்டல் ரீதியான வளர்ச்சி தொடர்பான முயற்சிகளை விரைவுபடுத்தி வருகின்ற நிலையில், நிறுவன கட்டமைப்புக்கள் மற்றும் வங்கிச்சேவை தளங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான நேரடி இணைப்பின் தேவைக்கான முக்கியத்துவமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. Blue Lotus 360 வழங்கும் ERP தொகுதியைப் பயன்படுத்தி வருகின்ற வணிகங்கள் இந்த ஒத்துழைப்பினூடாக வங்கியின் வலுவான API ஒருங்கிணைப்பு மூலம் DFCC iCONNECT உடன் தற்போது நேரடியாக தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். 

நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு தமது ERP கட்டமைப்புக்கள் மத்தியில் கொடுப்பனவுகளை ஆரம்பிப்பதற்கும், பண வசூல்களை நிர்வகிப்பதற்கும், பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளவும், மற்றும் தன்னியக்கமயமாக்கப்பட்ட இணக்கக்கூற்றுக்களை நேரடியாக மேற்கொள்ளவும் இந்த ஒருங்கிணைப்பு இடமளிக்கின்றது. பணக்கொடுப்பனவுகளை நிர்வகித்தல் மற்றும் வணிக மையத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கொடுப்பனவுகள் உள்ளிட்ட விற்பனை முனை (point-of-sale - POS) தொழிற்பாடுகளுக்கு இத்தீர்வு உதவுவதுடன், தனித்தியங்கும் தொழிற்பாட்டுச் சூழலில் முக்கியமான நிதிச் செயல்முறைகளை நிர்வகிப்பதற்கு இடமளிக்கின்றது. 

Blue Lotus 360 தளத்தினுள் முற்கூட்டியே உள்ளிணைப்புச் செய்யப்பட்டுள்ள DFCC வங்கி API க்கள் கிடைக்கப்பெறுகின்றமை இந்த ஒத்துழைப்பின் மூலமாகக் கிடைக்கின்ற முக்கியமான நன்மையாகும். நிறுவனங்கள் வங்கி குறித்த ஒருங்கிணைப்புக்களை வேறாக உருவாக்க வேண்டிய தேவையைப் போக்கி, அமுலாக்கத்திற்குத் தேவையான காலப்பகுதியை கணிசமான அளவில் குறைத்து, தொழில்நுட்பரீதியான செலவுகளைக் குறைக்கின்றது. மேலும், வணிகங்கள் மிக விரைவாக, தன்னியக்கமயமாக்கப்பட்ட வங்கிச்சேவைச் சூழலுக்கு உடனுக்குடன் மாறிக்கொள்வதற்கும் இடமளிக்கின்றது. 

ஒருங்கிணைந்து செயற்படும் திறன், தன்னியக்கமயமாக்கம், மற்றும் வேகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட, டிஜிட்டல்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிச்சேவைக் கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதில் DFCC வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கின்றது. உடனடியாகவே ERP ஒருங்கிணைப்புக்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்ட DFCC iCONNECT மூலமாக விரைவாக இதனை உள்வாங்குதல், அதிகரித்த அளவில் தொழிற்பாட்டின் துல்லியம், மற்றும் நிதிப்பரிவர்த்தனைகள் மத்தியில் மனிதரீதியான தலையீட்டைக் குறைத்தல் போன்ற நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. 

விரிவாக்கம் செய்யத்தக்க Blue Lotus 360 ன் ERP தளத்தை நிறுவனவாரியாக டிஜிட்டல் மாற்றத்திற்கான வளர்ச்சியை மேற்கொண்டு வருகின்ற நிறுவனங்கள் தொடர்ந்தும் உள்வாங்கி வருகின்றன. நிறுவனங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு தமது நிதி நிலைமை குறித்த மேம்பட்ட அறிவு மற்றும் தொழிற்பாட்டுரீதியாக வினைதிறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சீரான ஒருங்கிணைப்புக் கட்டமைப்பினை வழங்கும் நவீன API ஆற்றல்கள் மற்றும் நிறுவனரீதியான தரம் கொண்ட ERP கட்டமைப்பு ஆகியவற்றை இந்த ஒத்துழைப்பினூடாக DFCC வங்கி ஒன்றிணைக்கின்றது. 

DFCC கொடுப்பனவுகள் மற்றும் பண முகாமைத்துவ அணி, அட்டைத் தொழிற்பாடுகள், DFCC தகவல் தொழில்நுட்ப அணிகள், மற்றும் Blue Lotus 360 தொழில்நுட்ப அணிகள் ஆகியவற்றுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பின் மூலமாக இம்முயற்சி சாத்தியமாகியுள்ளது. இலங்கையின் வணிக சமூகத்தின் மத்தியில் வளர்ச்சி கண்டு வருகின்ற தேவைகளுக்கு உதவும் வகையில் விரிவுபடுத்தத்தக்க டிஜிட்டல் வங்கிச்சேவைத் தீர்வுகளை உருவாக்குவதில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இது சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. 

DFCC வங்கி குறித்த விபரங்கள் 

1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது. 

வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title