Apr 16, 2026 - 05:14 PM -
0
நைன்வெல்ஸ் வைத்தியசாலை (Ninewells Hospital), தனது புதிய கட்டட விரிவாக்கத்திற்கான அடிக்கல்லை நடுவதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்துவதில் ஒரு உறுதியான முன்னேற்றத்தை குறிக்கிறது.
வைத்தியசாலையின் முக்கிய பங்குதாரர்கள், கூட்டாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்துகொண்ட இந்நிகழ்வானது, வைத்தியசாலையின் ஒரு உருமாற்ற நிலையின் ஆரம்பத்தைக் கொண்டாடியது. இந்த வளர்ச்சியானது, மகளிர் மற்றும் சிறுவர் சுகாதாரப் பராமரிப்பில் நைன்வெல்ஸ் வைத்தியசாலை கொண்டுள்ள வலுவான அடித்தளத்திற்கு அப்பால், மிகவும் விரிவான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு நிறுவனமாக அதன் பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இந்த புதிய நிர்மாணமானது, அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட சத்திரசிகிச்சை திறன்கள், மேம்படுத்தப்பட்ட நோயாளர் பராமரிப்புச் சூழல்கள், அதிநவீன மருத்துவ உட்கட்டமைப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்துகின்றது. மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நோயாளர்களின் வசதியை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலையானது, மருத்துவ விசேடத்துவத்தையும் நோயாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய நைன்வெல்ஸ் வைத்தியசாலையின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர் விபாஷ் விஜேரத்ன தெரிவிக்கையில், "இந்த அடிக்கல் நடும் விழாவானது சுகாதார சேவையின் எதிர்காலம் தொடர்பான எமது தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது. நாம் சத்திரசிகிச்சை நிபுணத்துவ துறைகளில் விரிவாக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையில், மிக உயர்ந்த தரத்துடன் கூடிய அன்பான, நோயாளர் மைய பராமரிப்பை வழங்குவதிலேயே எமது கவனம் மையப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.
தமது ஆரம்பம் முதல் புத்தாக்கத்தை வழங்குவதில் நைன்வெல்ஸ் வைத்தியசாலை முன்னணியில் இருந்து வருவதுடன், நோயாளர்களை மையப்படுத்திய பராமரிப்பில் புதிய தர நிலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விரிவாக்கமானது வைத்தியசாலை கொண்டுள்ள பாரம்பரியத்தின் மீது உறுதியாக கட்டியமைக்கப்படுவதுடன், விசேடத்துவம் வாய்ந்த பராமரிப்பில் புதிய சாத்தியங்களை ஏற்படுத்தும் அதேவேளை, ஒரு நம்பகமான சேவை வழங்குனராக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.
இப்பணிகள் நிறைவடைந்தவுடன், இந்த நிர்மாணமானது வைத்தியசாலையின் கொள்ளளவை அதிகரிக்கவும், அதற்கான அணுகலை மேம்படுத்தவும், இலங்கை மற்றும் அதற்கு அப்பால் உள்ள நோயாளர்கள் எதிர்பார்க்கும் பராமரிப்பு தரத்தை மேலும் உயர்த்தவும் எதிர்பார்க்கிறது.
