Header Logo
SLIC
பல்சுவை
வெப்ப அலையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!

Apr 20, 2026 - 02:20 PM

வெப்ப அலையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

வெப்பநிலை அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலான கால கட்டங்களில் வெளியே நடமாடாதீர்கள். முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருங்கள். 

இலகுவான, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியில் செல்லும் போது சன் கிளாஸ், தொப்பி அல்லது குடை பயன்படுத்துங்கள். 

உடலில் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓ.ஆர்.எஸ் கரைசல், எலுமிச்சை பானம், மோர் அல்லது இளநீர் அருந்துங்கள். 

மது, டீ, காபி மற்றும் உடலில் நீர்ச்சத்தை இழக்க செய்யும் கார்பனேட் பானங்கள் பருகுவதை தவிருங்கள். 

நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருங்கள். போதிய அளவு தண்ணீர் பருகுங்கள். பயணம் செய்யும்போது தண்ணீரை உடன் எடுத்துச் செல்லுங்கள். 

அதிகபட்ச வெப்பம் நிலவும் நேரங்களில் கடினமான வேலை அல்லது வெளிப்புற செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். 

தர்பூசணி, முலாம் பழம், ஆரஞ்சு, திராட்சை, வெள்ளரிக்காய் மற்றும் கீரை வகைகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

ஜன்னல், கதவுகளில் சூரிய ஒளியை தடுக்கும் திரைச்சீலைகளை பயன்படுத்துங்கள். அதேவேளையில் அறைக்குள் சரியான காற்றோட்டத்தை உறுதி செய்யுங்கள். 

குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயுற்றவர்கள் சூரிய ஒளியில் நேரடியாக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். 

நிழலில் இருப்பது வெயிலை விட 10 டிகிரி வரை குளிர்ச்சியாக இருக்கும். மரங்கள் இயற்கையான குளிர்ச்சியை அளித்து, காற்றின் தரத்தை மேம்படுத்தும். அதனால் வீதியில் நிழலான பக்கத்தில் நடங்கள். மரத்தின் நிழலில் ஓய்வெடுங்கள். 

வீட்டு தோட்ட வேலை, நடைப்பயிற்சி உள்ளிட்ட செயல்களை அதிகாலையில் அல்லது சூரியன் மறைந்த பிறகு செய்யுங்கள். 

வியர்வை வெளிப்படும்போது உடல் வெப்பம் அந்த திரவத்தை நீராவியாக மாற்றும். அப்போது சருமத்தின் மேற்பரப்பில் இருந்து வெப்பத்தை அகற்றி உடலில் உள் வெப்பநிலையை குறைக்க உதவிடும். ஆனால் வியர்க்கும்போது திரவங்களையும், தாதுக்களையும் உடல் இழக்கும். எனவே தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் தண்ணீர் பருகுவது நல்லது. 

உடலை நீருக்குள் மூழ்கவைப்பது குளிர்ச்சிக்கு வித்திடும். ஏரி, குளம், நீச்சல் குளம் போன்றவற்றில் நேரத்தை செலவிடலாம். நீச்சல் தெரிந்திருப்பது முக்கியமானது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278