Header Logo

வணிகம்
கொமர்ஷல் வங்கி கொம்பேங்க் சக்தி முகவர் வங்கி வலையமைப்பை 26 முக்கிய இடங்களுக்கு விஸ்தரிக்கிறது

Apr 20, 2026 - 03:10 PM -

0

கொமர்ஷல் வங்கி  கொம்பேங்க் சக்தி முகவர் வங்கி வலையமைப்பை 26 முக்கிய இடங்களுக்கு விஸ்தரிக்கிறது

கொமர்ஷல் வங்கியானது தனது கொம்பேங்க் சக்தி (ComBank Shakthi) முகவர் வங்கி வலையமைப்பை நாடு முழுவதும் மேலும் 22 புதிய நிலையங்களால் விரிவுபடுத்தி, சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் தனது கவனத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது பாரம்பரிய கிளைகள் எட்டாத சமூகங்களுக்கும் வங்கி சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் உறுதிசெய்கிறது. 

இந்த விஸ்தரிப்புடன், முன்பே நிறுவப்பட்ட நான்கு நிலையங்களுடன் வங்கியின் முகவர் வங்கி வலையமைப்பு தற்போது நாடு முழுவதும் 26 இடங்களில் அமைந்துள்ளது. இந்த முயற்சியானது அனைவரையும் உள்ளடக்கும் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் வசதியை முன்னிறுத்தும் கொமர்ஷல் வங்கியின் தொடர்ச்சியான முயற்சியை பிரதிபலிக்கிறது. இது புவியியல் மற்றும் மக்கள் தொகை வேறுபாடுகளைத் தாண்டி அத்தியாவசிய வங்கி சேவைகள் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்கிறது. 

கொம்பேங்க் சக்தி முகவர் வங்கி முறைமையின் மூலம், வங்கி கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் தரப்பு முகவர்களுடன் (பொதுவாக நம்பகமான உள்நாட்டு வர்த்தகங்கள் அல்லது தனிநபர்கள்) பங்குடைமையை ஏற்படுத்துகிறது. இவர்கள் வங்கி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். இந்த அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம், வாடிக்கையாளர்கள் பண வைப்பு, பணம் மீளப்பெறுதல், நிதி பரிமாற்றம், நிலுவை விசாரணைகள் மற்றும் பட்டியல் கொடுப்பனவுகள் போன்ற அத்தியாவசிய வங்கி சேவைகளை தங்களுக்கு அருகிலும் வசதியான இடங்களிலும் மேற்கொள்ள முடிகிறது. 

வங்கியின் முகவர் வங்கி செயல்பாடுகள், அதன் விவசாய மற்றும் நுண் நிதிப் பிரிவுகள் (AMFU) நடவடிக்கைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் AMFU ஊழியர்கள் உருவாக்கிய வலுவான உறவுகள் மற்றும் சமூக இணைப்புகளைப் பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறை, உள்நாட்டு சமூகங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வங்கியின் சேவை பரப்பை விரிவுபடுத்த உதவுகிறது. 

புதியதாக சேர்க்கப்பட்ட கொம்பேங்க் சக்தி முகவர் வங்கி நிலையங்கள் கட்டுப்பொத்த, ஹங்கமுவ, புதுமுத்தாவ, மல்வத்துஹிரிபிட்டிய, உடுகம்பொல, கொஸ்வத்த, கொட்டியாகும்புர, அக்கராயங்குளம், ஒட்டுசுட்டான், பதுரெலிய, பொம்புவல, யட்டபத்த, கடிஹிங்கல, படுகொட்டுவ, வண்ணாத்தவில்லுவ, வங்காலை, பேசாலை, அக்கரைப்பற்று, திருக்கோவில், சித்தாண்டி, புதுக்குடியிருப்பு மற்றும் லகுகல ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.இவை, முன்பு தொடங்கப்பட்ட திஸ்ஸமஹாராம, ஹம்பாந்தோட்டை, சியம்பலாண்டுவ மற்றும் புத்தளம் ஆகிய நான்கு முன்முயற்சி நிலையங்களுடன் இணைகின்றன. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

title